search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவண்ணாமலை லாட்ஜ்"

    வேலூர் ஜெயிலில் நடந்த அடையாள அணிவகுப்பில் கைதான கற்பழிப்பு குற்றவாளிகளை ரஷிய இளம்பெண் அடையாளம் காட்டினார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அபார்ட்மெண்டில் தங்கியிருந்த ரஷிய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபார்ட்மெண்ட் உரிமையாளர் பாரதி, அவருடைய அண்ணன் நீலகண்டன் (35), மணிகண்டன், வெங்கடேசன் ஆகிய 4 பேரை கைதுசெய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த ரஷிய இளம்பெண் குணமடைந்து 20-ந் தேதி ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார். மேலும் வழக்கு விசாரணை தொடர்பாக அவர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், போலீஸ் பாதுகாப்புடன் திருவண்ணாமலையில் உள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் அடையாள அணிவகுப்பு நடந்தது. இதற்காக ரஷிய இளம்பெண் வேலூர் ஜெயிலுக்கு அழைத்து வரப்பட்டிருந்தார்.

    ஆரணி மாஜிஸ்திரேட்டு மகாலட்சுமி முன்னிலையில் இந்த அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது மற்ற கைதிகள் 10 பேரை வரிசையாக நிற்க வைத்து, அவர்களுடன் ரஷிய பெண் பாலியல் பலாத்கார வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாரதி, நீலகண்டன், மணிகண்டன், வெங்கடேசன் ஆகியோர் நிறுத்தப்பட்டனர்.

    அப்போது ரஷிய பெண், தன்னை பாலியல் பலாத்காரம் செய்தவர், மானபங்கம் செய்தவர்கள் என 4 பேரையும் சரியாக அடையாளம் காட்டி உள்ளார். 5 முறை நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் அவர் தன்னை பலாத்காரம் செய்தவரையும், மானபங்கம் செய்தவர்களையும் அடையாளம் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ஆசிரமத்தில் தங்கி இருக்கும் மகளை பார்க்க ரஷியாவில் இருந்து அவரது தாயார் நேற்று திருவண்ணாமலை வந்தார். பின்னர் ஆசிரமத்துக்கு சென்று அவர் தனது மகளை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.
    திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ரஷிய பெண்ணிற்கு நடந்த சம்பவம் தமிழக மக்கள் வெட்கப்படவேண்டிய வி‌ஷம் என்று மாவட்ட நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் நேற்று மாலை மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட ரஷிய பெண்ணை பார்த்தனர்.

    மேலும் அவர்கள் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

    இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, நிருபர்களிடம் கூறியதாவது:-

    ரஷிய இளம்பெண் இன்னும் சுயநினைவின்றி காணப்படுகிறார். அவருக்கு ரஷிய மொழியை தவிர வேறு மொழி பேச தெரியவில்லை. ரஷிய மொழி தெரிந்த மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் அந்த பெண்ணிடம் பேசி விசாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    திருவண்ணாமலைக்கு சுற்றுலா வந்த ரஷிய பெண்ணிற்கு நடந்த இந்த சம்பவம் தமிழக மக்கள் வெட்கப்படவேண்டிய வி‌ஷயமாகும். வெளிநாட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு வந்து தங்கி உள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு வலுப்படுத்த மாவட்ட காவல் துறைக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருவண்ணாமலை லாட்ஜில் பிறந்தநாள் கொண்டாடத்தில் ரஷிய பெண் கற்பழிக்கப்பட்டாரா என்பது தொடர்பாக கைதான 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள கஸ்தூரி நகரில், தனியாருக்கு சொந்தமான லாட்ஜில் அபார்ட்மென்ட் உள்ளது.

    வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் வகையில் 5 சிறிய வீடுகள் போன்ற வடிமைப்பில் இந்த அபார்ட்மென்ட் அமைந்திருக்கிறது.

    இந்த அபார்ட்மென்டில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கடந்த 12-ந் தேதி அறை எடுத்து தங்கினார். தியான பயிற்சி தொடர்பான ஆய்வு செய்ய ஆன்மிக சுற்றுலா பயணியாக வந்திருப்பதாகவும், 10 நாட்கள் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், அபார்ட்மென்ட் நிர்வாகிகள் நீலகண்டன், அவரது தம்பி பாரதி ஆகியோர், நேற்று முன்தினம் மயங்கிய நிலையில் ரஷிய பெண்ணை செங்கம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவனைக்கு கொண்டுவந்து சேர்த்தனர். அறையில் மயங்கிக் கிடந்தவரை காப்பாற்றி அழைத்து வந்ததாக டாக்டர்களிடம் 2 பேரும் தெரிவித்தனர்.

    ரஷிய பெண்ணை பரிசோதித்த டாக்டர்கள், அவரது மார்பகம் உள்ளிட்ட உடலின் பல்வேறு பகுதிகளில் காயமும், நகக் கீறல்களும் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பாலியல் பலாத்காரம் செய்திருப்பதும் தெரியவந்தது. எனவே, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருவண்ணாமலை டவுன் போலீசார், அந்த பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், மலேசியாவில் வசிக்கும் ஒருவருக்கு சொந்தமான இந்த அபார்ட்மென்ட்டை லீசுக்கு எடுத்து நடத்தியதும், அனுமதியின்றி லாட்ஜாக பயன்படுத்தியதும் தெரியவந்தது.

    மேலும், ரஷிய பெண் மயக்கமடைந்தது குறித்து அபார்ட்மென்ட் நிர்வாகிகள் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர் விசாரணையில், குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, ரஷிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது.

    எனவே, அபார்ட்மென்ட் நிர்வாகிகள் கீழ்பென்னாத்தூர் அடுத்த வேடனந்தத்தைச் சேர்ந்த நீலகண்டன்(36) அவரது தம்பி பாரதி(30), இவர்களுடைய நண்பர்களான செங்கம் சாலையை சேர்ந்த மணிகண்டன்(37), பாலாஜி நகரைச் சேர்ந்த வாடகை கார் டிரைவர் உத்தண்டி மகன் வெங்கட்(29), சிவா(32) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் நேற்று காலை முதல் இரவு வரை தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. வேலூர் சரக டிஐஜி வனிதா, திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி ஆகியோர் நேற்று மாலை திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்து, கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் சுமார் 1 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து டி.ஐ.ஜி. வனிதா கூறியதாவது:-

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. விசாரணை முடிந்ததும் கைது உள்ளிட்ட மற்ற தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றார்.

    ஓட்டல் நடத்தி வரும் மணிகண்டனுடைய பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த 14-ந் தேதி இரவு அபார்ட்மென்டில் மதுபான பார்ட்டி நடத்தியதும், அப்போது தனியாக தங்கியிருந்த ரஷிய இளம்பெண்ணுக்கு லெமன் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

    குளிர் பானத்தில் கலந்துகொடுத்த மயக்க மருத்தின் அளவு அதிகமானதால், நேற்று முன்தினம் வரை மயக்கம் தெளியாமல் இருந்துள்ளது. எனவே, அந்த பெண் மீது தண்ணீரை ஊற்றியுள்ளனர். அப்போதும் மயக்கம் தெளியவில்லை.

    உயிருக்கு ஆபத்து ஏற்படும் என பயந்தவர்கள், அறையில் மயங்கி கிடந்ததாக நாடகமாடி, தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசென்றதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 5 பேரில் யார், யார் பாலியல் கொடுமையில் ஈடுபட்டது, அதற்கு உதவியவர்கள் யார் என்பது தெரியவில்லை. எனவே, கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

    மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள ரஷிய பெண்ணுக்கு, நேற்று இரவு மயக்கம் தெளிந்தது.

    அவரிடம் ரஷ்ய மொழியும், ஆங்கிலமும் தெரிந்த, திருவண்ணாமலையில் தங்கியிருக்கும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த 2 பேரை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆன்மிக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்லும் திருவண்ணாமலையில் நடந்துள்ள இந்த கொடுமையான சம்பவம், பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
    திருவண்ணாமலையில் விடுதிக்குள் புகுந்து ரஷிய இளம்பெண்ணை தாக்கி கற்பழிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை:

    ரஷிய நாட்டை சேர்ந்த திருமணமாகாத 21 வயது இளம்பெண், இந்தியாவில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்ப்பதற்காக, கடந்த 12-ம் தேதி மும்பை வந்தார். அங்கு இருந்து திருவண்ணாமலைக்கு வந்தார். கிரிவலப் பாதையில் யோகிராம் சுரத் குமார் ஆசிரமத்தின் அருகில் உள்ள தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    அருணாசலேஸ்வரர் கோவில், ரமணாஸ்ரமத்தை சுற்றி பார்த்தார். கடந்த 14-ந்தேதி (சனிக்கிழமை) விடுதி அறைக்குள் சென்ற ரஷிய இளம்பெண் நேற்று வரை வெளியில் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள், உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர்.

    லாட்ஜ் உரிமையாளர் விரைந்து வந்து அறையை திறந்து பார்த்தார். அப்போது, ரஷிய இளம்பெண் உடலில் பலத்த காயங்களுடன் ஆடைகள் கிழிக்கப்பட்டு அலங்கோலமான நிலையில் சுய நினைவின்றி கிடந்தார். அதிர்ச்சியடைந்த லாட்ஜ் நிர்வாகிகள், அவரை மீட்டு அத்தியந்தலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இதுகுறித்து, விடுதி உரிமையாளர் திருவண்ணாமலை டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார், தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ரஷிய இளம்பெண்ணை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    மருத்துவ பரிசோதனையில், ரஷிய இளம்பெண் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். ரஷிய இளம்பெண் தங்கி இருந்த லாட்ஜ் அறையில் இருந்து அதிக அளவிலான வெளிநாட்டு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.

    ரஷிய இளம்பெண்ணுக்கு கார் டிரைவராக, திருவண்ணாமலை பாவாஜி நகரை சேர்ந்தவர் இருந்துள்ளார். ரஷிய இளம்பெண்ணை சுற்றுலா தலங்களுக்கு அவர் தான் அழைத்து சென்று வந்துள்ளார். அந்த டிரைவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    சனிக்கிழமையன்று கார் டிரைவர் தனது நண்பர்கள் 3 பேருடன் லாட்ஜிக்கு வந்து சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கார் டிரைவர் மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் குறித்து திருவண்ணாமலை எஸ்.பி. பொன்னி, உயரதிகாரிகள் மூலம் ரஷிய தூதரக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். ரஷிய தூதரக அதிகாரிகளும் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    இதனிடையே, பாதுகாப்பு இல்லாமல் செயல்பட்டதாக லாட்ஜ் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். #Tamilnews
    ×